வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது


வீட்டில் நகை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே வீட்டில் நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி துவரந்தை பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் அசோக்குமார் (வயது 40). இவர் வீட்டில் கடந்த 26-ந்தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடியதாக சூரங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கொம்பு மதன் மகன் செல்வமணி (38) மற்றும் வன்னியராஜ் மகன் அருண்குமார் (19) ஆகிய இரண்டு பேரும் அசோக்குமார் வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தாா். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தையும், 4 பவுன் தங்க நகையும் பறிமுதல் போலீசார் செய்தனர்.


Related Tags :
Next Story