மோட்டார் பம்பு திருடிய 2 பேர் கைது
மோட்டார் பம்பு திருடிய 2 பேர் கைது
நீலகிரி
ஊட்டி
ஊட்டி அடுத்த காரபிள்ளு பகுதியை சேர்ந்தவர் சாந்தி. விவசாயியான இவரது தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவசாய மோட்டார் பம்பு திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் உல்லத்தி அம்மநாடு பகுதியை சேர்ந்த போஜன் (வயது 48), மணி என்கிற சுரேஷ் என்பதும் விவசாய மோட்டார் பம்பு திருடியது இவர்கள்தான் என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, போஜன் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்பை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story