மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
x

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

லால்குடி தாலுகா அலுவலகம் மற்றும் லால்குடி திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆசாமிகளை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிள்களை லால்குடி அருகே எசனைக்கோரையை சேர்ந்த அந்தோணிராஜ் (வயது 33), மேலவாளாடி தெற்கு சத்திரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (27) ஆகியோர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story