மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் தீபம் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பியோட முயற்சித்தனர்.

இதைகண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை இனாம்காரியந்தல் பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 21), மற்றும் 19 வயது வாலிபர் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு ஈடுபட்டு உள்ளதும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை தாலுகா, மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story