வேப்பூர், திட்டக்குடி பகுதி கோவில்களில் கலசம் திருடிய 2 பேர் கைது


வேப்பூர், திட்டக்குடி பகுதி  கோவில்களில் கலசம் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர், திட்டக்குடி பகுதி கோவில்களில் கலசம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இதேபோல் ஏரிக்கரையில் இருந்த செல்லியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள 3 கலசம் மற்றும் பித்தளை மணிகளையும் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வேப்பூர், திட்டக்குடி பகுதியில் கோவிலில் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்ததால் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்திான். விசாரணையில் அவர்கள் வேப்பூர் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த ராமு மகன் முத்து (வயது 39), அடரியை சேர்ந்த பன்னீர் மகன் சரவணன் (31) ஆகியோர் என்பதும், இவர்கள் வேப்பூர், திட்டக்குடி பகுதி கோவில்களில் உள்ள கலசம், உண்டியல் உள்ளிட்டவைகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து முத்து, சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story