குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
x

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

மணியாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில் கடந்த மாதம் 18-ந் தேதி தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை சுத்தமல்லி கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த சொர்ணம் மகன் ரமேஷ் (என்ற) ராமையா (வயது 36) மற்றும் விளாத்திகுளம் பகுதியில் 5 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான எட்டயபுரம் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த முருகன் (59) ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்று ரமேஷ், முருகன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அவர்கள் 2 பேரையும் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story