நிலத்தகராறில் 2 பேர் கைது
மானூர் அருகே நிலத்தகராறில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
மானூர்:
மானூர் அருகே உள்ள மருதப்பபுரத்தைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 57). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கல் நாட்டியிருந்தார். அதனை அதே ஊரைச் சேர்ந்த முத்து துரை (57) என்பவர் தனது உறவினர்கள் 4 பேர்களுடன், மேற்படி நிலத்திற்கு சென்று அங்கு நடப்பட்டிருந்த சர்வே கற்களை அகற்றி சேதம் ஏற்படுத்தினர். இதனை தட்டிக்கேட்ட வெள்ளத்துரைக்கு, முத்து துரை தரப்பினர் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளத்துரை மானூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முத்துதுரை, கதிரேசன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story