மாணவர்கள் மோதலில் 2 பேர் கைது


மாணவர்கள் மோதலில் 2 பேர் கைது
x

சேரன்மாதேவியில் மாணவர்கள் மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கும், அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நெற்றியில் பொட்டு வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்காக சேரன்மாதேவி ெரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது பள்ளி மாணவர்கள், கத்தியால் கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 மாணவர்களுக்கு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story