மோட்டார் ைசக்கிளில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது


தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பூங்கா அருகில் மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி பூங்கா அருகே மோட்டார் ைசக்கிளில் வைத்து கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் கஞ்சா

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த குமார் மகன் மாரி என்ற மாரியப்பன் (வயது 22), இந்திராநகரை சேர்ந்த விஜயகுமார் மனைவி லில்லி (30) என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

அவர்களது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் மாரியப்பன், லில்லி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 கிராம் கஞ்சா, ரூ.8 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மாரியப்பன் மீது ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story