மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உள்பட 2 பேர் கைது


மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
x

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியர்

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் லால்குடி அருகே பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே போல் பூவாளூர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (55). விவசாயி.

இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ், சந்திரசேகர் ஆகியோர் 14 வயது மாணவி ஒருவரிடம் கடந்த 4 மாதங்களாக நெருங்கி பழகி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டார்.

3 மாத கர்ப்பம்

இதனையடுத்து மாணவியின் குடும்பத்தினர் அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள், மாணவியை பரிசோதனை செய்ததில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்ட மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது, சந்திரசேகர் மற்றும் ஆசிரியர் சதீஷ் ஆகியோர் தன்னிடம் நெருங்கி பழகி வந்த தகவலை தெரிவித்தார். மேலும் அவர்கள் இருவரும் ஆசைவார்த்தைகள் கூறி மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

கைது

இது குறித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி (பொறுப்பு) விசாரணை நடத்தி சந்திரசேகர், சதீஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.


Next Story