3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது


3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
x

திருச்சியில் நடத்திய அதிரடி சோதனையில் 3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சியில் நடத்திய அதிரடி சோதனையில் 3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா பதுக்கல்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்குள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கைது

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பாண்டித்துரை (வயது 23), குட்செட்ரோடு ஆலம் தெருவை சேர்ந்த கார்த்திக் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story