பேட்டரி திருடிய வழக்கில் 2 பேர் சிக்கினர்


பேட்டரி திருடிய வழக்கில் 2 பேர் சிக்கினர்
x

பாளையங்கோட்டையில் பேட்டரி திருடிய வழக்கில் 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஜே.சி.பி. ஆபரேட்டர். இவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஜெபா கார்டன் பகுதியில் ஜே.சி.பி.யை நிறுத்தி இருந்தாராம். இந்த வண்டியில் இருந்த பேட்டரியை மர்மநபர்கள் திருடி சென்றதாக பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ரெட்டியார்பட்டியை சேர்ந்த பண்டாரம் மகன் ஜெகன் (வயது 30), மகிழ்ச்சிநகரை சேர்ந்த சந்தோஷ் (30) ஆகியோர் ஜே.சி.பி.யில் இருந்து பேட்டரி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story