கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்


கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
x

நெல்லையில் கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நயினார்குளம் மார்க்கெட் ரோட்டில் சந்தேகப்படும் படியாக நின்ற 2 பேரை பிடித்தனர்.

விசாரணையில், டவுன் வையாபுரிநகரை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ்குமார் (வயது 24), பாரதியார் தெருவை சேர்ந்த குமரேசன் மகன் தளவாய் சண்முகம் (19) என்பதும், சட்டவிரோதமாக கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, 20 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்தனர்.


Next Story