சிறுவன் உள்பட 2 பேர் தற்கொலை
சிறுவன் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சமயபுரம் அருகே உள்ள நெய்குப்பை மலைமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 17). இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனின் தற்ெகாலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் மண்ணச்சநல்லூர் இந்திரா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி (65). திருச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியின் கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.