வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை


வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு இடங்களில் வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 67). பலசரக்கு கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அல்லிநகரம் அருகே பொம்மையகவுண்டம்பட்டி தெலுங்கு பஜார் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (62). இவர் நரம்பு தளர்ச்சி நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story