வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
மயிலாடும்பாறை அருகே உள்ள மண்ணூத்து கிராமத்தை சேர்ந்தவர் நீதி (வயது 52). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது மனைவியிடம் பணம் கேட்டார். அப்போது மனைவி பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமனூர் அருகே அண்ணாநகர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (57). தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.