வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
விருதுநகர் பகுதியில் வெவ்வெறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் பகுதியில் வெவ்வெறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விஷத்தை தின்றார்
விருதுநகர் அல்லம்பட்டி மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்த பட்டாசு கடை ஊழியர் சிங்காரவேல் பாண்டி (வயது 51). இவரது மனைவி பாண்டீஸ்வரி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இந்தநிலையில் இவர் தனது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இவரது மகள் பாண்டி செல்வி பிளஸ்-2 முடித்துவிட்டு விவசாய பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கான பணத்தை தயார் செய்யுமாறு பாண்டிசெல்வி, சிங்காரவேல் பாண்டியிடம் கூறினார். ஆனால் சிங்காரவேல் பாண்டிக்கு தனது மகள் படிப்புக்கு பணம் தயார் செய்ய முடியவில்லை என்ற மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிங்காரவேல் பாண்டி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சங்கர் (40). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்த இவர் கடந்த ஒரு வாரமாக மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தனது இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் இவர் நாட்டார்மங்கலம் அய்யனார் கோவிலுக்கு பின்புறம் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் இவரது மனைவி கற்பகவல்லி மற்றும் உறவினர்கள்அங்கு சென்று பார்த்தபோது சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த நிலையில் கயிறு அறுந்து கீழே இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுபற்றி கற்பகவல்லி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.