வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
கல்லிடைக்குறிச்சி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்த அருணாசலம் மகன் பேச்சி (வயது 53). விவசாயியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தனது மகனிடம் மதுக்குடிக்க பணம் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பேச்சி வயலுக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்ைசக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பேச்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் தூத்துக்குடி பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் முருகன் (55). இவரது மாமியார் பார்வதி அம்மாள் கல்லிடைக்குறிச்சி வேம்படி தெருவில் வசித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி கல்லிடைக்குறிச்சி வந்த முருகன், பார்வதி அம்மாளிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் மனவேதனை அடைந்த முருகன் விஷம் குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாமபாக இறந்தார்.
இந்த இரு சம்பவங்கள் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.