டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி


டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி
x

சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

டாஸ்மாக் ஊழியர்கள்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி பக்கமுள்ள ஊர்கவுண்டர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). கிருஷ்ணகிரி தாலுகா சுருளிஅள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர்கள் 2 பேரும் சூளகிரி அருகே உள்ள சின்னாறு டாஸ்மாக் கடையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அலகுபாவி அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சக்திவேல், மாரிமுத்து ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

2 பேரும் பலி

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் சக்திவேல் இறந்தார். மாரிமுத்து மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story