ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு


ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு
x

ரெயிலில் அடிபட்டு 2 பேர் இறந்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ரெயிலில் அடிபட்டு 2 பேர் சாவு இறந்தனர்.

ஆம்பூர்- விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி இறந்து கிடந்தார். அவர் மாநிறம் உடையவர். வெள்ளை சட்டை, வேட்டி அணிந்துள்ளார்.

இதேபோல் வேலூர் மாவட்டம் லத்தேரி- காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இறந்தவர் மாநிறம் உடையவர். நீல நிறத்தில் சிவப்பு கலர் கலந்த டி-ஷர்ட், கருப்பு கலர் டிரவுசர் அணிந்து உள்ளார்.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் நான்காவது பிளாட்பாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். 3 பேரும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. உடல்களை முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story