எக்ஸ்பிரஸ் ெரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி
விருதுநகர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலியாகினர். படிக்கட்டில் பயணித்த போது ஏற்பட்ட தகராறால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலியாகினர். படிக்கட்டில் பயணித்த போது ஏற்பட்ட தகராறால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
தகராறு
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயிலில் தென்காசி மாவட்டம் மருதமுத்தூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32) என்பவர் ஈரோட்டிற்கு பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அதே ரெயிலில் கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்த மாரியப்பன்(42), கோவைக்கு பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தார். இருவரும் ஒரு பொதுப்பெட்டியில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
பெயிண்டர் பலி
இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென அவர்கள் இருவரும் ெரயில் பெட்டியின் படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துக்குமாருடன் பயணம் செய்த சிவலார்குளத்தை சேர்ந்த முருகேசன் மற்றும் என்.முத்துக்குமார் ஆகியோர் அபாய சங்கிலியை இழுத்து ெரயிலை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் ெரயில் பாதையில் சென்று பார்த்தனர். அப்போது முத்துக்குமார் பலத்த காயங்களுடன் ெரயில் பாதையில் கிடந்தார். அவருடன் தகராறு செய்த பெயிண்டர் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
மற்றொருவரும் சாவு
இதையடுத்து முத்துக்குமாரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே ெரயில் பாதையில் உயிரிழந்த மாரியப்பனின் உடலை தூத்துக்குடி ரெயில்வே போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே எதற்காக தகராறு ஏற்பட்டது? எப்படி கீழே விழுந்தனர்? என பல்வேறு கோணங்களில் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.