மின்சாரம் தாக்கி 2 பேர் பலி


மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
x

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மதுரை

பேரையூர்,

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

மின்சாரம் தாக்கி முதியவர் சாவு

உசிலம்பட்டி தாலுகா கணவாய்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 65), இவர் நேற்று காலை தோட்டத்தில் இருந்த மாட்டை மரம் ஒன்றில் கட்ட முயன்றார். அருகில் மின்கம்பத்தில் அறுந்து தொங்கி கொண்டிருந்த மின்சார வயரில் கை பட்டதில் மின்சாரம் தாக்கி அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கூறினார்கள். அவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். .இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் பலி

திருமங்கலம் அருகே மேலக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் புதிதாக மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராஜா சந்திரசேகர் என்பவர் பட்டாசு கடை திறக்க உள்ளார். இந்த பட்டாசு கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த முத்து சங்கையா (35), நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார் (31), மதுரையைச் சேர்ந்த மூவரசன் (42) ஆகியோர் சோலார் விளக்குகளை கடையின் முன் பகுதியில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் இரும்பு கம்பத்தில் சோலார் விளக்குகளை பொருத்தி தரையில் ஊன்றும் போது இரும்பு கம்பம் மேலே சென்ற மின் வயரில் உரசியது. இதில் முத்து சங்கையா மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். மேலும் முத்துக்குமார், மூவரசனும் காயம் அடைந்தனர். அங்குள்ளவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துசங்கையா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.படுகாயம் அடைந்த முத்துக்குமார், மூவரசன் ஆகிய இருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story