புதுமாப்பிள்ைள உள்பட 2 பேர் பலி


புதுமாப்பிள்ைள உள்பட 2 பேர் பலி
x

புதுமாப்பிள்ைள உள்பட 2 பேர் பலி

தஞ்சாவூர்

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்

தஞ்சையை அடுத்த அன்னப்பன்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய மகன் அஜய்(வயது 25). இவரும், மெயின்ரோட்டை சேர்ந்த கருப்பையன் மகன் சத்தியமூர்த்தி(23), கலைஞர் காலனியை சேர்ந்த செந்தமிழ் மகன் மணியரசன்(24) ஆகியோரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் புதிதாக போடப்பட்டு வரும் தஞ்சை-விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அன்னப்பன்பேட்டை-கூடலூர் இடையே இவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக கிராவல் மண் எடுத்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

இந்த விபத்தில் அஜய், சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். மற்றொரு நபர் மணியரசன் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மணியரசனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான 2 பேரும், காயம் அடைந்தவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்களில் அஜய்க்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுதாக இருந்தது. திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுளும் செய்யப்பட்டு வந்தது. திருமணத்தையொட்டி அஜய் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி உறவினர்களுக்கும் புத்தாடை எடுப்பதற்காக அஜய்யின் பெற்றோர் திருச்சிக்கு சென்று இருந்தனர். இந்த நிலையில் விபத்தில் அஜய் பலியானார்.

எல்லை பிரச்சினை

புறவழிச்சாலை புதிதாக போடப்படுவதால் விபத்து நடந்த இடம் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டது என்ற குழப்பம் நிலவியது. முதலில் மெலட்டூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி என கூறப்பட்டதால் மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் அதன்பிறகு விபத்து நடந்த இடம் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி என கூறப்பட்டதால் தாலுகா போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். மெலட்டூர் மற்றும் தாலுகா போலீசார் இது தங்கள் பகுதிக்கு வருமா? என வெகுநேரம் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

பின்னர் அஜய், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story