வனத்துறையை சேர்ந்த 2 பேர் பணியிடை நீக்கம்


வனத்துறையை சேர்ந்த 2 பேர் பணியிடை நீக்கம்
x

வனத்துறையை சேர்ந்த 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர்கள் ராமர், லட்சுமணன். சகோதரர்களான இவர்கள் 2 பேரும் செண்பகத்தோப்பு அருகே தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்களை வனத்துறையினர் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.

அவர்களை தாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்தை சேர்ந்த பாரதி மற்றும் ஜெயக்குமார் ஆகிய 2 வன ஊழியர்களையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக இணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவிட்டார்.



Next Story