முதியவரிடம் ரூ.1¼ லட்சம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது


முதியவரிடம் ரூ.1¼ லட்சம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

முதியவரிடம் ரூ.1¼ லட்சம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

துறையூர் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 71). விவசாயி. இவர் கடந்த 7-ந் தேதி துறையூரில் உள்ள கனரா வங்கியில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு பாலக்கரையில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது,

அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் அவரிடம் இருந்து பணத்தை பறித்து ெகாண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, பணத்தை பறித்து சென்றது பொள்ளாச்சியை சேர்ந்த தினேஷ் குமார் (22) மற்றும் திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story