உளுந்தூர்பேட்டை அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே ஆடு திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு(வயது 35), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான 2 ஆடுகளை வீட்டின் வாசலில் கட்டி வைத்திருந்தார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அந்த 2 ஆடுகளையும் காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அலமேலு மற்றும் அவரது உறவினர்கள் மடப்பட்டு வாரச்சந்தைக்கு சென்று பார்த்தபோது அங்கு 2 பேர் அலமேலுவுக்கு சொந்தமான 2 ஆடுகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அலமேலு மற்றும் உறவினர்கள் பிடித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கிழக்கு மருதூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 ஆடுகளையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சிறுவன் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story