மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
திருவலம் அருகே லாரி மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பிலாயானார்கள்.
திருவலம் அருகே லாரி மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பிலாயானார்கள்.
மோட்டார்சைக்கிள் மீது லாரிமோதல்
திருவலம் அருகே உள்ள கோரந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட மேஸ்திரி. தர்மபுரி மாவட்டம் சாமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42). கல் உடைக்கும் தொழிலாளி. இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கோரந்தாங்கல் பகுதியிலிருந்து திருவலம் நோக்கி, காட்பாடி- திருவலம் சாலையில், வந்து கொண்டிருந்தனர்.
செம்பராயநல்லூர் புதூர் அருகே வரும்போது, அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக, காட்பாடி நோக்கி சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேஸ்திரி உள்பட 2 பேர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.