புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


கோவிலுக்கு சென்றபோது வாணியம்பாடி அருகே உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

திருப்பத்தூர்

தடுப்பணையில் குளித்தனர்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த மசிகம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மகன் ஜீவா (வயது 27). ஜனார்த்தனன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 7 பேர், வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் புல்லூர் தடுப்பணை பகுதியில் உள்ள கனகநாச்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர்.

பின்னர் அங்குள்ள தடுப்பணை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஜீவா, அவருடைய உறவினரான எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கல்லூரி மாணவர் மனோகரன் (19) ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

இதனால் அவர்கள் நீரில் மூழ்கினர். இதனை கண்ட உடன் இருந்தவர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்கள் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதால் மீட்க முடியவில்லை.

சுமார் 2 மணி நேரம் போராடி இருவரை

யும் பிணமாக மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குப்பம் போலீசார் பிணத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story