விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்


விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்
x

விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


மதுரையில் இருந்து சிவகாசிக்கு சென்ற தனியார் பஸ் விருதுநகர்-சிவகாசி ரோட்டில் பி.குமாரலிங்கபுரம் அருகே நேற்று மாலை சென்று கொண்டு இருந்தது. அப்போது பி.குமாரலிங்கபுரம் ஊரில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பி.குமாரலிங்கபுரம் முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிரேகன் துரைராஜ் (வயது 29), ராஜ அழகன் என்பவர் மகள் அழகு பிரியா (11) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆமத்தூர் போலீசார் பஸ் டிரைவர் வெள்ளூரை சேர்ந்த கண்ணன் (33) என்பவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பி. குமாரலிங்கபுரம் பகுதியில் சமீபத்தில் கவர்னர் வருகையின் போது வேகத்தடையை அகற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், மீண்டும் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் சூலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேகத்தடை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.


Next Story