கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் கூலித்தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கூலித்தொழிலாளி

திருச்சி வாத்தலை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த பாபு வீட்டில் யாரும் இல்லாதபோது, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

பெரம்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி பிரிந்ததால் தற்கொலை

வையம்பட்டியை அடுத்த அயன்ரெட்டியபட்டியை சேர்ந்தவர் கண்ணுச்சாமி (38). இவரது மனைவி சிவரஞ்சனி. இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கண்ணுச்சாமியை விட்டு சிவரஞ்சனி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையில் இருந்து வந்த கண்ணுச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story