ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் உள்பட 2 பேர் பலி
ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஜோலார்பேட்டை
ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ஆம்பூர் அருகே பி.கஸ்பா வேப்பமர தெருவை சேர்ந்தவர் சுரேஷ்கபாபு (வயது 52). பெயிண்டர். நேற்று காலை தனது மனைவி சத்யாவிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் ஆம்பூர்- பச்சக்குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய யார்டு அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.