மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம்
x

நாட்டறம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 49), இவர் அம்பலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அம்பலூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூர்குப்பம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த ராஜாராம் (39) மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்து பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகானந்தம் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story