வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை


வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

குடிப்பழக்கம்

காட்டுப்புத்தூரை அடுத்த நத்தம் ஊராட்சி வேந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி யாண்டி. இவரது மகன் பரமசிவம் (வயது 26). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த பரமசிவம் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் இறந்தார். இத குறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு சம்பவம்

முசிறி அழகாபட்டி ரோட்டின் அருகே உள்ள பனந்தோப்பை சேர்ந்தவர் கம்பராயன் (55) இவருக்கு நீண்ட நாட்களாக ஆசனவாயிலில் உபாதை இருந்து வந்துள்ள நிலையில் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது, அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எச்.ஐ.வி். இருந்தது தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story