வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
எலி மருந்து
திருச்சி எடத்தெருரோடு பிள்ளைமார் நகரை சேர்ந்தவர் சுரேஷ். கொத்தனார். இவருடைய மகன் நெல்ராஜ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் எலிமருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அவரது தாய் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அளவுக்கு அதிகமான மாத்திரைகள்
திருச்சி திருவானைக்காவல் பர்மாகாலனியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 72). இவர் வலிப்புநோய்க்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று தியாகராஜன் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.