வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

புளிய மரத்தில் மோதியது

முசிறியை அடுத்த சோளம்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25). இவரும், இவரது நண்பருமான அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவரும் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

இதேபோல் துவரங்குறிச்சி அருகே உள்ள கள்ளக்கம்பட்டியை சேர்ந்தவர் சந்திரன் (35). இவரும், அதே ஊரை சேர்ந்த ஒருவரும் நேற்று முன்தினம் இரவு அதிகாரத்தில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி பிரிவு சாலை அருகில் வந்தபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன்-மனைவி காயம்

காட்டுப்புத்தூர் அருகே உள்ள கமலாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (30). கொத்தனாரான இவரும், இவரது மனைவி தனலட்சுமி (27) என்பவரும் வேலைக்கு சென்று விட்டு காட்டுப்புத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். எம்.புத்தூர் சத்திரம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story