இரு தரப்பினர் மோதல் வாலிபர் உள்பட 2 பேர் கைது
திண்டிவனத்தில் இரு தரப்பினர் மோதல் வாலிபர் உள்பட 2 பேர் கைது
திண்டிவனம்
திண்டிவனம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டை கண்ணகி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள்(48) என்பவரின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் ரோசணை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இதில் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்தபாபு, அருள், அன்பரசு, சதீஷ், பார்த்திபன், ஆனந்தி, அருகலட்சுமி, கார்த்திகேயன், முனியம்மாள்ஆகிய 9 பேர் மீதும், முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சந்திரா, பன்னீர்செல்வம், சுதாகர், செல்வி, லட்சுமி, மோகன் உள்பட 7 பேர் மீதும் ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வம், கார்த்திகேயன்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.