போக்சோவில் பெண் உள்பட 2 பேர் கைது
போக்சோவில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி
முசிறி தாலுகாவை சேர்ந்த சத்துணவு சமையலர் சுலக்சனா என்ற பிருந்தா. இவர் ஒரு சிறுமியை பிறந்தநாள் துணி எடுத்து தருவதாக கூறி முசிறியில் உள்ள ஜவுளிக்கடைக்கு அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து ஏலூர்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரும் ஜவுளிக்கடைக்கு வந்து இருந்தார். அப்போது, அவர் சிறுமியை தகாத முறையில் தொட்டு பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுலக்சனா என்ற பிருந்தா, ரெங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story