ரெயிலில் அடிபட்டு எலக்ட்ரீஷியன் உள்பட 2 பேர் பலி


ரெயிலில் அடிபட்டு எலக்ட்ரீஷியன் உள்பட 2 பேர் பலி
x

திருப்பத்தூர், காட்பாடி பகுதியில் ரெயிலில் அடிபட்டு எலக்ட்ரீஷியன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருப்பத்தூர்

எலக்ட்ரீஷியன்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா, லத்தேரியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகன் உமா சங்கர் (வயது 39), எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணம் ஆகி பூங்கொடி என்கிற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். நேற்று காலை லத்தேரி- காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உமாசங்கர் தண்டவாளத்தை கடக்கும்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

இதேபோல் திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த தருமன் மகன் பாலமுருகன் (24). போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

ரெயிலில் அடிபட்டு பலி

இந்தநிலையில் நேற்று காலை திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாகச் சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புஷ்பா, சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story