கணவர் உள்பட 2 பேர் கைது


கணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Sept 2023 12:15 AM IST (Updated: 3 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக அவரது கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாமனார், மாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக அவரது கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாமனார், மாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காதல் திருமணம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த நாச்சிக்குளம் தச்சர் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது24).இவரும் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஈச்சங்குடி கிராமத்தை சேர்ந்த அபிநயா (21) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 1½ வயதில் ஆண் குழந்ைத உள்ளது.

வரதட்சணை கேட்டு தொந்தரவு

இந்தநிலையில் கணவர் விக்னேஷ் அடிக்கடி மனைவி அபிநயாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததுடன் தனது வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கூறி தாக்கி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அபிநயா, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

கணவர் உள்பட 2 பேர் கைது

இந்த நிலையில் அபிநயா முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்ட தொந்தரவு செய்து வருவதாக புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் மற்றும் அவரது உறவினர் சிவகங்கையை சேர்ந்த சேகர் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மாமனார், மாமியாருக்கு வலைவீச்சு

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேசின் தந்தை கணேசன், தாயார் கமலா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story