கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தனர். தொடர்ந்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்த போது, அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெட்டூைரச் சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பதும், மற்றொருவர் கல்லூரி மாணவர் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story