விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை


விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
x

விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விவசாயி

சோமரசம்பேட்டை அருகே உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் லிங்கம் பூசாரி. இவரது மகன் குமரலக்கன் (வயது 38). விவசாயியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இவர் குடிப்பதற்கு பணம் கேட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அவர், பூச்சிக்கொல்லி மருந்தை குடிப்பதாக மிரட்டி விட்டு வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குமரலக்கன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பழ வியாபாரி

திருச்சி தாராநல்லூர் வீரமாநகரம் புதுதெருவை சேர்ந்தவர் பழனிகுமார் (51). வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்தார். சர்க்கரை நோயால் கடந்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த இவருக்கு சமீபகாலமாக பார்வைக்குறைபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பழனிகுமார் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

இதுபற்றி அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story