கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
தேனி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
தேனி அருகே போடேந்திரபுரம் விலக்கு பகுதியில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தடுப்பு தொடர்பாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு பெண் உள்பட 2 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துப்பிள்ளை (வயது 60), தவசி (50) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துப்பிள்ளை, தவசி ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story