கோவில் உண்டியலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது


கோவில் உண்டியலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது
x

திருவண்ணாமலையில் கோவில் உண்டியலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் காணவில்லை என்று அக்கோவிலின் தர்மகர்த்தா திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை கம்பங்கொல்லை தெருவை சேர்ந்த சங்கீதா (வயது 34) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தை சேர்ந்த செல்வின்துரை என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலின் உண்டியலை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1530 மற்றும் கூர்மையான ஆயுதம் பறிமுதல் செய்தனர்.


Next Story