பெண் உள்பட 2 பேர் தற்கொலை


பெண் உள்பட 2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ேவறு பெண்ணுடன் திருமணம்

முசிறி காலேஜ் ரோடு விசாலாட்சி நகரை சேர்ந்தவர் விஜயராஜ். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதியின் மகள் சிவசங்கரி (வயது 30). இவருக்கும் குருமகாராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு குருமகராஜா வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சிவசங்கரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

முசிறி அருகே உள்ள சிட்டிலரை மேலமேடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (72). விவசாயியான இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று மயங்கி கிடந்தார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story