மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு சிறை
நத்தம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேருக்கு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
நத்தம் அருகே உள்ள காசம்பட்டியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 32). கட்டிட தொழிலாளி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர், தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நத்தம் லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் (34), ரெட்டியபட்டியை சேர்ந்த பாவம் (33) ஆகியோர் சின்ராசுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது நத்தம் உரிமையியல் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உதயசூரியா, குற்றம்சாட்டப்பட்ட மாணிக்கம், பாவம் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.