மான்கறி சமைத்த 2 பேர் கைது


மான்கறி சமைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 July 2022 5:37 PM IST (Updated: 2 July 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே மான்கறி சமைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மாதகடப்பா வனப்பகுதியில் உள்ள காப்புக்காட்டில் மான்கறி சமைப்பதாக வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனசரக அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வனத்துறையினர் காப்புக்காட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது ஜிட்டு கானாறு இடத்தில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 29), ஜீவா (26) ஆகிய இருவரும் மான்கறி சமைத்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்து, 1 கிலோ மான்கறியை பறிமுதல் செய்து, அழித்தனர்.

மேலும் அவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story