புகையிலை கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
பெட்டிக்கடைக்காரரிடம் புகையிலை கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை கோத்த தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 45). இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பெட்டிக்கடைக்கு வந்த 2 பேர் ஹான்ஸ் புகையிலை கேட்டுள்ளனர். இதற்கு கோபாலகிருஷ்ணன் தனது கடையில் ஹான்ஸ் விற்பதில்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செம்பனார்கோவில் ெரயிலடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுதாகர் (23), மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் உள்கேணி பகுதியை சேர்ந்த முத்து மகன் நாகராஜ் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.