ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது


ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது
x

கபிஸ்தலத்தில் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கபிஸ்தலம் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ராமானுஜபுரம் தோப்பு தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது27), திருப்பலைத்துறை குடியானத்தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் வாசு (28) ஆகிய 2 பேர் என்பதும், இவர்கள் காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், வாசு ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story