அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற 2 பேர் கைது


அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற 2 பேர் கைது
x

அனுமதியின்றி மணல் ஏற்றிச்சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜேஷ்குமார் நேற்று அதிகாலை மணல்மேடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது மணல்மேடு அருகே உள்ள ஆத்தூர் கிராமம் நடுத்தெரு பகுதியில் இருந்து 4 லாரிகளில் மணல் ஏற்றி சென்று கொண்டிருந்ததை கண்டு அவற்றை நிறுத்த சைகை காட்டினார். அதிகாரியை கண்டதும், 2 லாரிகளின் டிரைவர்கள் கீழே குதித்து தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அனுமதியின்றி லாரிகளில் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 2 பேர் மற்றும் 4 லாரிகளை பறிமுதல் செய்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சீனிவாசன் (வயது 39), திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் ரஞ்சித் (29) ஆகிய 2 லாரி டிரைவர்களை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story