நாகர்கோவில் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது விற்ற 2 பேர் கைது
நாகர்கோவில் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பகுதியில் டாஸ்மாக் பாரில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாரில் மது விற்பனை
சட்டத்திற்கு விரோதமாக டாஸ்மாக் பாரில் மதுகுடித்த 2 பேர் தஞ்சையில் இறந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நாகர்கோவில் நேசமணிநகர் ஆயுதப்படை மைதான ரோட்டில் மூடப்பட்டுள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை நடைபெறுவதாக நேசமணிநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது மூடப்பட்டு இருந்த பாரில் மதுவிற்பனை நடந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுவிற்பனை செய்த திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த கோலப்பன் (வயது 35) என்பவரை கைது செய்தனர். இவர் தற்போது கோட்டார் பட்டகசாலியன் விளையில் வசித்து வருகிறார். பின்னர் அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல பட்டக சாலியன்விளை ஈத்தாமொழி சாலையில் செயல்பட்டு வரும் அரசு அனுமதி பெற்ற டாஸ்மாக் பாரில் பணியாற்றி வரும் மாதவலாயத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவர் மது விற்றது தெரிய வந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.